11006 கணினி வழிகாட்டி: 1.

வே.நவமோகன் (தொகுப்பாசிரியர்). தெகிவளை: காயத்திரி பப்ளிக்கேஷன், த.பெ.இலக்கம் 64, 1வது பதிப்பு, ஜனவரி 2002. (தெகிவளை: காயத்திரி பதிப்பகம்).

48 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 50., அளவு: 22×15 சமீ., ISBN: 955-97519-0-5.

கணினி வழிகாட்டி என்ற பல்தொகுதி கணினி அறிவியல் ஏட்டின்; முதல் தொகுதி இதுவாகும். மவுசைப் பயன்படுத்துவது எப்படி என்பதிலிருந்து தொடங்கி வெப் பேஜ் ஒன்றைப் பதிவேற்றுவது எப்படி என்பது வரை  27 அடிப்படை விடயங்கள் பற்றிய ஆரம்ப அறிவை இந்நூலிலுள்ள குறிப்புகள் வழங்குகின்றன. Desk Top என்றால் என்ன? Folder களை உருவாக்குவது எப்படி? File Folder களை நகர்த்துவது எப்படி? file customising செய்வது எப்படி? Quick Launch என்றால் என்ன? Bootable Disc ஒன்றை உருவாக்குவது எப்படி? Shortcut  ஒன்றை உருவாக்குவது எப்படி? Clip Board என்றால் என்ன? Screen server க்கு password கொடுப்பது எப்படி? Software  ஒன்றை Install செய்வது எப்படி? New Font  ஒன்றை Install செய்வது எப்படி? தொலைந்த பைல்களை தேடுவது எப்படி? Floppy Disc ஒன்றை Format செய்வது எப்படி? என்பது போன்ற கணனி தொடர்பான பயிற்சிகளை இந்நூல் வழங்குகின்றது. இக்குறிப்புகள் முன்னர் தினகரன் வாரமஞ்சரியில் கணனி மஞ்சரி பகுதியில் வெளிவந்திருந்தன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 30376).

ஏனைய பதிவுகள்