மலர் வெளியீட்டுக் குழு. இணுவில்: சொ.ஹரிசங்கர், தலைவர், இணுவில் பொது நூலகம் சனசமூக நிலையம், 1வது பதிப்பு, ஒகஸ்ட் 2013. (கோண்டாவில்: அன்ரா பதிப்பகம், உப்புமடம் சந்தி).
48 பக்கம், புகைப்படத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ.
பல்வேறு ஊர்ப் பிரமுகர்களின் வாழ்த்துச் செய்திகளையும் சு.உத்திரன் எழுதிய ‘அறிவு விருத்திப் பணிகளில் இணுவில் பொது நூலகம்’, சண். பத்மநேசன் எழுதிய ‘தமிழர் புலம்பெயர்வும் கிராம மேம்பாடும்: இராசையா இராசம்மா தகவல் தொழில்நுட்ப மையம் ஒரு சமூகவியல் நோக்கு’, ஞான. திருக்கேதீஸ்வரன் எழுதிய ‘இணுவில் பொது நூலக செயற்பாடுகள்: ஒரு நோக்கு’ ஆகிய கட்டுரைகளையும் இச்சிறு மலர் கொண்டுள்ளது.