அருளானந்தம் ஸ்ரீகாந்தலட்சுமி. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xiv, 310 பக்கம், விலை: ரூபா 1800., அளவு: 24×17.5 சமீ., ISBN: 978-955-659-516-1.
நூலகர்களுக்கும் நூலகவியல் துறையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் பயனுள்ள வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்நூல் Dewey Decimal Classification பகுப்புத் திட்டத்தின் 23ஆவது பதிப்பை தமிழில் விரிவாக விளக்குகின்றது. அருளானந்தம் ஸ்ரீகாந்தலட்சுமி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதம நூலகராகப் பணியாற்றுகின்றார். மூன்று பகுதிகளை உள்ளடக்கிய இந்நூலின் முதலாவது பகுதியில் பிரதான வகுப்புகள் என்ற முதலாவது சாராம்சமும், பிரிவுகள் என்ற இரண்டாவது சாராம்சமும், பகுதிகள் என்ற மூன்றாவது சாராம்சமும் பிரதான அட்டவணைகள் என்ற தலைப்பின் கீழ் பொருள் வகுப்புப் பகுதி, கணினி அறிவியல்-தகவல்-பொது ஆக்கங்கள், மெய்யியலும் உளவியலும், சமயம், சமூக அறிவியல்கள், மொழியும் மொழியியலும், இயற்கை அறிவியல்களும் கணிதவியலும், தொழில்நுட்பம், கலைகள், இலக்கியம், வரலாறும் புவியியலும் ஆகிய வகுப்புகளுக்கான இலக்கங்கள் தரப்பட்டுள்ளன. பகுதி இரண்டில் பகுப்பாக்கப் பணி, தூயி தசமப் பகுப்புத் திட்டமும் எண் கட்டுமானமும், துணை அட்டவணைகளும் எண் கட்டுமானமும் (நியம உப பிரிவுகள, பிரதேச அட்டவணை, இலக்கியத்தின் உப பிரிவுகள், மொழியின் உப பிரிவகள், இன-வகுப்பு-தேசிய குழுமங்கள், மொழிகள்), சிறப்பு இணைப்பெண்களும் எண் கட்டுமானமும் ஆகிய விடயங்கள் விளக்கப்பட்டுள்ளன. பகுதி மூன்றில் சார்புச் சொல்லடைவுகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் தரப்பட்டுள்ளன. வகுப்பெண்கள், விரிவான வகுப்பெண்கள் என்பன பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளன.
14A24 தூயி தசமப் பகுப்புத் திட்டம்: 23ஆம் பதிப்புக்கான கைந்நூல்.
அருளானந்தம் ஸ்ரீகாந்தலட்சுமி. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 2வது பதிப்பு, தை 2017, 1வது பதிப்பு, ஆடி 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xiv, 310 பக்கம், விலை: ரூபா 1000., அளவு: 24×17.5 சமீ., ISBN: 978-955-659-516-1.
நூலகர்களுக்கும் நூலகவியல் துறையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் பயனுள்ள வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்நூல் னுநறநல னுநஉiஅயட ஊடயளளகைiஉயவழைn பகுப்புத் திட்டத்தின் 23ஆவது பதிப்பை தமிழில் விரிவாக விளக்குகின்றது. அருளானந்தம் ஸ்ரீகாந்தலட்சுமி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதம நூலகராகப் பணியாற்றுகின்றார். மூன்று பகுதிகளை உள்ளடக்கிய இந்நூலின் முதலாவது பகுதியில் பிரதான வகுப்புகள் என்ற முதலாவது சாராம்சமும், பிரிவுகள் என்ற இரண்டாவது சாராம்சமும், பகுதிகள் என்ற மூன்றாவது சாராம்சமும் பிரதான அட்டவணைகள் என்ற தலைப்பின் கீழ் பொருள் வகுப்புப் பகுதி, கணினி அறிவியல்-தகவல்-பொது ஆக்கங்கள், மெய்யியலும் உளவியலும், சமயம், சமூக அறிவியல்கள், மொழியும் மொழியியலும், இயற்கை அறிவியல்களும் கணிதவியலும், தொழில்நுட்பம், கலைகள், இலக்கியம், வரலாறும் புவியியலும் ஆகிய வகுப்புகளுக்கான இலக்கங்கள் தரப்பட்டுள்ளன. பகுதி இரண்டில் பகுப்பாக்கப் பணி, தூயி தசமப் பகுப்புத் திட்டமும் எண் கட்டுமானமும், துணை அட்டவணைகளும் எண் கட்டுமானமும் (நியம உப பிரிவுகள், பிரதேச அட்டவணை, இலக்கியத்தின் உப பிரிவுகள், மொழியின் உப பிரிவுகள், இன-வகுப்பு-தேசிய குழுமங்கள், மொழிகள்), சிறப்பு இணைப்பெண்களும் எண் கட்டுமானமும் ஆகிய விடயங்கள் விளக்கப்பட்டுள்ளன. பகுதி மூன்றில் சார்புச் சொல்லடைவுகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் தரப்பட்டுள்ளன. வகுப்பெண்கள், விரிவான வகுப்பெண்கள் என்பன பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளன. (முன்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 11018).