11048 குழந்தை உளவியல்: விருத்தி நிலைகளும் பெற்றோர் பங்கும்.

றவூப் ஸெய்ன். திகறியா: அபிவிருத்திக் கற்கைகள் மையம் (Centre for Development Studies CDS), 188/12 கண்டி வீதி, திகறியா, 1வது பதிப்பு, மே 2011. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

v, 105  பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 250., அளவு: 21×15 சமீ.

குழந்தைகளின் உளவியல் விருத்தி நிலைகளை நடைமுறை யதார்த்தங்களோடு ஒட்டி உறவாடும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அபிவிருத்தி உளவியலும் குழந்தைகளும், பிறப்புரிமைக் காரணிகளின் தாக்கம், குழந்தைகளின் மனவெழுச்சி விருத்தி, குழந்தைகளின் அறிவு வளர்ச்சி, குழந்தைகளின் ஒழுக்க வளர்ச்சி, குழந்தைகளின் சமுதாய வளர்ச்சி, குழந்தைகளின் மொழி வளர்ச்சி ஆகிய ஏழு இயல்களில் இவ்வாய்வு விரிகின்றது. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் ஆர்:- 12124). 

ஏனைய பதிவுகள்