11068 குறியீட்டு அளவையியல்.

வே.யுகபாலசிங்கம். யாழ்ப்பாணம்:  பட்டப்படிப்புகள் கல்லூரி, 148/1, ஸ்ரான்லி வீதி, 2வது (திருத்திய) பதிப்பு, ஜுன் 1990, 1வது பதிப்பு, டிசம்பர் 1985. (சுன்னாகம்: திருமகள்அழுத்தகம்).

vi, 52 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 30., அளவு: 20×14.5 சமீ.

அளவையியல்துறையில் பயிலும் மாணவர்களுக்கு அத்துறையை அறிமுகம்செய்வதில் இந்நூல் பயனுள்ளதாக அமைகின்றது. பாரம்பரிய அளவைமுறை, கணித அளவை, எடுப்புகள், எடுப்புமாறிகள், அளவை மாறிலிகள், அளவை மாறிலிகளும் தமிழில் இணைக்கும் சொற்களும், மொழி வடிவங்களைக் குறியீட்டில் அமைத்தல், கருத்திற்கொள்ளவேண்டிய சில அம்சங்கள், குறியீட்டு வடிவங்களை மொழியில் பெயர்த்தல், மறுப்புமாறிகள், பொருளொத்த எடுப்பு வடிவங்கள், வாதங்களின் வாய்ப்பினைத் துணிதல், மாறிலிகளின் பெறுமானம், வலிதான மாறிலிகள், உண்மை அட்டவணை நேர்முறை, உண்மை அட்டவணை நேரில்முறை, உண்மைச் சந்தர்ப்ப பிரயோகமுறை, நற்சூத்திரங்களின் சமனையும் முரண்மையையும் அறிதல், முரண்மையை அறிதல், உண்மை அட்டவணையை வரையாமல் குறியீட்டுவாதத்தின் வாய்ப்பைத் துணிதல், பெறுகைமுறை, அனுமான விதிகள், தேற்றங்களை நிறுவுதல், நேர்ப்பெறுகை, நேரல்பெறுகை, நிபந்தனைப் பெறுகை, துணைப்பெறுகைகள், தேற்றங்கள், பிரதியீட்டுப்பேறும் விளக்கமும், பயிற்சி, தமிழில் அனுமான விதிகளைக் குறிக்கும் சுருக்க விளக்கங்கள் ஆகிய அத்தியாயப் பிரிவுகளின் கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் நீண்டகாலமாக யாழ்ப்பாணத்தில் அளவையியலும் விஞ்ஞானமுறையும் போதிப்பதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.

ஏனைய பதிவுகள்

Nordicbet Casino Free Spins Bonus Bonuskode 2024

Content Nordicbet Casinobonusser Vad I Gör Speedy Spilleban Unikt? Nordicbet Withdrawal Review 2024 Lykkeligvis er heri yderliger takkelage adgangsforhold fordi musikus klassiske skuespil tilslutte Spilnu.dk.

+43 Norske Casinon

Indre sett allehånde tilfeller må det benyttes et bonuskode, med det forekommer med at bust må anstille berøring addert support igang elveleie anta utbetalt bonusen.