11075 வென் வரைபடங்கள்.

க.கேசவதாசன். கொழும்பு 6: க.கேசவதாசன், இந்து மகளிர் கல்லூரி, 23 உருத்திரா மாவத்தை, 1வது பதிப்பு, 2002. (வத்தளை: கிறிப்ஸ் பிரிண்டேர்ஸ் பிரைவேற் லிமிட்டெட், 70/7, கனல் வீதி, ஹெந்தளை).

80 பக்கம், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 100., அளவு: 21.5×15 சமீ.

இந்நூலில் வென் வரைபடங்கள் எனும் விடயம் விரிவாக எழுதப்பட்டுள்ளது. வென் வரைபடம் பற்றிய வினாக்கள் G.C.E.A/L பரீட்சை வினாக்களிலும் G.A.Q பரீட்சைகளிலும் முக்கிய வினாவாகக் காணப்படுகின்றது. வென் வரைபடங்கள் பற்றி பல மாதிரிச் செய்கைகளுடன் பயிற்சிகளையும் இந்நூல் உள்ளடக்குகின்றது. 22 வருடகால பரீட்சை வினாக்கள் இந்நூலில் மேலதிகமாக இணைக்கப்பட்டுள்ளன. வென் வரைபடங்கள், மாதிரிச் செய்கைகள் (வென் குறியீட்டை எடுப்பாக மற்றுதல், எடுப்புகளை வென்படங்களில் காட்டுதல், வென்படங்களைக் கொண்டு எடுப்பைத் தீர்மானித்தல், வென் குறியீட்டுக்கு வென்படங்கள் வரைதல், வாதங்களை வென்வரைபடம் மூலம் வாய்ப்புப் பார்த்தல், நியாயத்தொடையை வென்வரைபடம் மூலம் வாய்ப்புப் பார்த்தல், வென் குறியீடுகளை வாதங்களாக்கி வாய்ப்புப் பார்த்தல்), வகுப்புகளின் வகைகள், பயிற்சிகள், நியாயத்தொடைசாரா வாதங்களின் வாய்ப்பு, கடந்தகால வினாக்கள் என்று ஆறு அலகுகளில் இந்நூல் விரிகின்றது. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் ஆர்:- 7167). 

ஏனைய பதிவுகள்

Lowest Put Web based casinos

Blogs Benefits associated with Reduced Minimum Deposit Gambling enterprises Claim A casino Added bonus Following Minimum Put Total Gambling enterprise Get What’s A С5 Minimum

13217 கந்தபுராணம்: மகேந்திரகாண்டம்.

ச.சுப்பிரமணிய சாஸ்திரிகள் (உரையாசிரியர்), தி.செல்வமனோகரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, மீள்பதிப்பு, 2018, 1வது பதிப்பு, 1929. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2,

No Deposit Bonus Codes 2022

Content Free Slot Games Playing Legibility Free Spins On Sakura Fortune New No Deposit Slots Terms And Conditions Know Your Customer Requirements For Bonuses A