ஸ்ரீநீலகண்ட சிவாசாரியார் (வடமொழி மூலம்), காசிவாசி. செந்திநாதையர் (தமிழாக்கம்). தேவிகோட்டை: ஸ்ரீ அரு. சோமசுந்தரஞ் செட்டியார், 1வது பதிப்பு, வைகாசி 1908. (தமிழ்நாடு: செந்திநாதசுவாமி யந்திரசாலை, திருமங்கலம்).
185-400 பக்கம், விலை: இந்திய ரூபா 2-0-0., அளவு: 23.5×15.5 சமீ.
அகச்சமயங்கள் ஆறும் சைவபேதங்களேயாகும். அவை பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம், சிவ சங்கராந்த வாத சைவம், ஈசுர அவிகார சைவம், சிவாத்துவித சைவம் என்பன. இவை சைவசித்தாந்தத்தோடு மாறுபடுவது பெரும்பாலும் முத்திநிலையைப் பொறுத்தேயாகும். இவற்றுள் சிவாத்துவித சைவம் பெரிதும் வணங்கப்படுகின்ற ஒன்றாகும். இச்சைவம் இந்நூலில் பெரிதும் போற்றப்படுகின்றது.