K.N.நவரத்தினம், L.L.செல்வநாதன். யாழ்ப்பாணம்: பண்டிற் K.N.நவரத்தினம், 211, நாவலர் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 1980. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(2), 18 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.
இந்நூல் புராதன இந்துசமய மூலக்கொள்கைகளையும் விஞ்ஞானக் கருத்துக்களையும் தர்க்க சாஸ்திரக் கருத்துக்களையும் கொண்டதாக வெளிவந்துள்ளது. இந்நூலில் அமைந்த மூலக் கருத்துக்கள் இலங்கைச் சோதிட ஆய்வு மன்றத்தினால் ஆய்வுக்கு எடுக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரசுரத்துக்கு அனுமதிக்கப்பட்டதாக இலங்கைச் சோதிட ஆய்வுமன்றத் தலைவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளருமான நா.சுப்பிரமணிய ஐயர் தனது பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4300).