வ.மகேஸ்வரன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
vii, 104 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-659-500-0.
பெரியதும் சிறியதும், கணபதியும் ஜனபதியும், இன மொழி அடையாளமாக முருகன், கந்தர்சஷ்டி கவசத்தின் சமூக உள்ளடக்கம், சாத்தனும் அரிகர புத்திரனும், சண்டேசுவரர்: சிவன் கோவில் நம்பிக்கைப் பொறுப்பாளர், இலங்கையில் சிங்கள மக்களிடையே கண்ணகி வழிபாடு: இருப்பும் நடப்பும், இந்துப் பண்பாட்டில் பெண் தெய்வங்கள்: வாழ்வும் வீழ்வும், வீரசைவ மரபும் யாழ்ப்பாணத்து வீரசைவரும், பக்தி இயக்கமும் தமிழும், ஆழ்வார்களின் பக்தி அனுபவம், சுர-அசுர யுத்தமும் துஷ்டநிக்கிரக சிஷ்ட பரிபாலனமும் ஆகிய 12 தலைப்புகளில் இத்தொகுதியில் உள்ள கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவை விநாயகர், சிவன், முருகன், ஐயப்பன், சண்டேசுவரர், பெண்தெய்வங்கள் ஆகிய கடவுளர் குறித்தும் கந்தசஷ்டி கவசம், திவ்விய பிரபந்தம், தேவாரம் ஆகிய பக்தி இலக்கியங்கள் குறித்தும் அமைந்துள்ளன. இவை எவ்வாறு பெருமரபிலும் சிறுமரபிலும் இணைந்துள்ளன என்பதை, பண்பாட்டு மானுடவியல் நோக்கில் பார்வையிடுகின்றன. நமது பண்பாட்டுச் சூழலில் பெரமரபு-சிறுமரபு என்ற இரு மரபுகளும் சகல தளங்களிலும் வேரூன்றியுள்ளன. இவை இரண்டுக்கும் இடையிலான இடையுறவு அநாதியானது. ஒன்றிலிருந்து ஒன்று தோற்றம் கொண்டது. பண்பாடு என்பது அவ்வாறான படிமலர்ச்சி கொள்ளும் என்பதுதான் மானுடவவியலாளர்களது கருத்து. அப்பண்பாட்டுப் படிமலர்ச்சி தொடர்பான ஒருகருத்தாடலை இந்நூற் கட்டுரைகள் முன்வைக்கின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61424).