ப.கோபாலகிருஷ்ணன் (பிரதம ஆசிரியர்). காரைநகர்: திருப்பணிச் சபை, திக்கரை முருகமூர்த்தி ஆலயம், 1வது பதிப்பு, 1990. (யாழ்ப்பாணம்: சுடரொளி அச்சகம், 121/4, மானிப்பாய் வீதி).
(93) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ.
இம்மலரில் வழமையான ஆசிச் செய்திகளுடன், திருப்பணிச் சபையின் செயலாளர் அறிக்கை (வே.நடராசா), காரைநகர் திக்கரை முருகன் திருத்தல வரலாறு (வே.நடராசா), திக்கைத் திரிபந்தாதி (க.வைத்தீஸ்வரக் குருக்கள்), கும்பாபிஷேக மகத்துவம் (த.அம்பிகைபாகன்), கோபுர தரிசனம் கோடி புண்ணியம் (ப.கோபாலகிருஷ்ணன்), திருமுருகாற்றுப்படையும் அறுபடை வீடுகளும் (கனகசபாபதி நாகேஸ்வரன்), அருணகிரிநாதரும் திருப்புகழும் (வண்ணை ப.கணேசலிங்கம்), ஈழத்தில் கிறிஸ்தவத்திற்கு முன்னர் நிலவிய முருக வழிபாடு பற்றிய தொல்லியல் சான்றுகள் (சி.க.சிற்றம்பலம்), இலங்கையிலே பரத நாட்டியம் (வி.சிவசாமி), ஈழத்தில் முருக வழிபாடு (சிவ.மகாலிங்கம்), காரைநகர் திக்கரை முருகன் அந்தாதிக் கீர்த்தனைகள் (ந.வீரமணி ஐயர்), திருப்பொன்னூஞ்சல் (அளவையூர் சீ.வினாசித்தம்பி), தேவஸ்தான திருவிழா உபயகாரர்கள், கும்பாபிஷேக மண்டலாபிஷேக உபயகாரர்கள் எனப் பதினாறு தலைப்புகளில் இம்மலரின் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10227).