11228 திருமந்திரம் சில முத்துக்கள்.

நாகேந்திரம் கருணாநிதி. லண்டன் E6 2HD: 109, Caledon Road, East Ham, 1வது பதிப்பு, 2017. (லண்டன்: ஜே.ஆர். பிரின்ட்).

113 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.

திருமந்திரம் கூறும் கருத்துக்களில் நூலாசிரியர் தேர்ந்தவற்றை எடுத்து விளக்கும் நூல் இது. திருமந்திரம், திருமூல நாயனார் (திருமூலர்), இறைதத்துவம், குருவே சிவம், மனித நேயம், சமய தத்துவம், ஆன்ம ஈடேற்றம், உடல் கூற்று அறிவியல், தீட்டு, வானியல் அறிவியல், மருத்துவம், கல்லாமை, அறம், அட்டாங்க யோகம், ஆசனங்கள், மூச்சுப் பயிற்சி (பிராணாயாமம்), ஆதாரங்கள் (சக்கரங்கள்), கரு உற்பத்தி, பிறர்மனை நாடாமை, மது அருந்தாமை, நிலையற்ற செல்வம், நிலையில்லா இளமை, நிலையற்ற வாழ்க்கை, இறைவனை அடைவதற்குரிய வழிமுறைகள் ஆகிய 24 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் நாகேந்திரம் கருணாநிதி, சைவசித்தாந்தத்தைத் திருவாவடுதுறை ஆதீனத்தின் ஐரோப்பிய சைவசித்தாந்த ரத்தினப் பயிற்சி மையமாகிய லண்டன் சைவமுன்னேற்றச் சங்கத்தில் சைவசித்தாந்த ரத்தினம் பட்டம் பெற்றவர். தாயகத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தின் மயிலிட்டி வீரமாணிக்கதேவன் துறையைச் சேர்ந்த இவர், புலம்பெயர்ந்து லண்டன் ஈஸ்ட்ஹாம் பகுதியில் வாழ்ந்து வருகின்றார்.

ஏனைய பதிவுகள்

купить ламинат

Игровые автоматы онлайн казино Beste Online-Casinos Купить ламинат Философия использования дерева в скандинавской культуре нашла отражение в коллекции плитки под дуб, которая раскрывает истинную красоту