பக்கீர் ஜஃபார். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xii, 412 பக்கம், விலை: ரூபா 2000., அளவு: 25×17.5 சமீ., ISBN: 978-955-659-503-1.
முதுமாணி, தத்துவ முதுமாணி, கலாநிதி போன்ற பட்டமேற் கற்கைகளுக்கான ஆய்வில் ஈடுபடும் தொகைசார் ஆய்வுகளில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு அனுமானப் புள்ளிவிபரவியலில் வழிகாட்டக்கூடிய வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. தொகைசார் ஆய்வுகளில் கருதுகோள் சோதனை என்பது மிகவும் முக்கியமானதாகும். அதனை மையப்படுத்தி இந்நூல் எழுதப்பட்டிருப்பினும் தொகைசார் பகுப்பாய்வில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் நுட்பங்கள் இந்நூலில் தரப்பட்டுள்ளன. புள்ளிவிபரவியலுக்கான அறிமுகம், மீடிறன் பரம்பல்கள், மையநிலை அளவீடுகள், மாறும் தன்மை (Variability), Z-புள்ளிகள்: புள்ளிகளின் அமைவிடமும் நியமமாக்கப்பட்ட பரம்பல்களும், நிகழ்தகவு, நிகழ்தகவும் மாதிரிகளும் மாதிரி இடைகளின் பரம்பலும், கருதுகோள் சோதனை, திசைகொண்ட சோதனைகள், உத்தேசமாக மதிப்பிடுதல், வலு, t-புள்ளிவிபரம், இரண்டு சாரா மாதிரிகளில் புள்ளிவிபரவியல் அனுமானம், தொடர்புள்ள மாதிரிகளில் புள்ளிவிபரவியல் அனுமானம், மாறற்றிறனின் பகுப்பாய்வுக்கான அறிமுகம் ANOVA, மீள்-அளவீடுகள் மாறற்றிறன் பகுப்பாய்வு, இரு-காரணி ANOVA (சாரா அளவீடுகள்), இணைபும் தொடர்புப் போக்கும், கை-வர்க்க புள்ளிவிபரம், வரிசைநிலை தரவுகளுக்கான புள்ளிவிபரவியல் நுட்பங்கள் மான்-விற்னி (Maam-Whitney) மற்றும் வில்கொக்ஸன் (Wilcoxon) சோதனைகளும் ஸ்பியர்மான் இணைபும் ஆகிய 18 பாடத்தலைப்புகளில் இந்நூல் விரிகின்றது.