கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 1வது பதிப்பு, 1980. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
122 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×12.5 சமீ.
இந்நூல் 9ஆம் தரத்துக்குரியதாக, குறித்த பாடத்திட்டத்திற்கு அமைய கல்வி அமைச்சின் நெறிப்படுத்தலின்படி எழுதப்பட்டுள்ளது. இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ள இந்நூலின் இரண்டாம் பகுதியில் பொருட்களின் கொள்வனவும் விற்பனவும், வியாபாரத்திற் பயன்படுத்தப்படும் ஆவணங்கள், கொடுப்பனவு முறைகள், பிறநாட்டு வியாபாரம், தொழில் அமையங்களின் வகைகள், பணமும் வங்கிகளும், இரட்டைப் பதிவுமுறை ஆகிய ஏழு இயல்களில் எழுதப்பட்டுள்ளது. இவ்வாக்கத்தின் எழுத்தாளர் குழுவில் ஜயந்த வீரக்கோன், கருணாரத்ன மீரியகல, T.P. அந்தரவெல ஆகியோர் பணியாற்றியுள்ளனர். தமிழாக்கக் குழுவில் ஐ.தம்பிமுத்து, அ.வி.விக்டோரியா ஆகியோர் பணியாற்றியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11207).