பா.இரகுவரன். பருத்தித்துறை: திருமதி ரஞ்சிதா ரகுவரன், தேடல் வெளியீடு, பிராமின் வீதி, தும்பளை, 1வது பதிப்பு, மார்ச் 2016. (பருத்தித்துறை: தீபன் பிரின்டர்ஸ்).
(4),xi, 158 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-43055-0-2.
இலங்கையில் நாட்டுக்கூத்து தோற்றமும் வளர்ச்சி மாற்றங்களும், இலங்கையில் நாட்டுக்கூத்துகளும் போக்குகளும், அண்ணாவியார் இளையதம்பி வைரமுத்து அவர்களுடனான நேர்காணல், கலைப்பரிதி ஆர்.எஸ். ஆனந்தன் பருத்தித்துறை கூத்துக் கலைஞருடனான நேர்காணல், வடமராட்சி கிறிஸ்தவக் கூத்து அண்ணாவியார் கலையரசு பா.வேதநாயகம் அவர்களுடனான நேர்காணல், வடமராட்சியில் நாட்டுக் கூத்துகள், வடமராட்சியில் நாட்டுக்கூத்து அரங்குகளும் ஆற்றுகை முறைமைகளும், வடமராட்சிக் கூத்தின் பொதுவான கட்டமைப்பு, பருத்தித்துறைக் கூத்து அரங்கும் அளிக்கையும் பற்றிய அறிமுகம், பூச்சுப் பூசலும் வேசம் கட்டலும், வடமராட்சிக் கூத்துக்களில் ஆடல்கள் ஐ, வடமராட்சிக் கூத்துக்களில் ஆடல்கள் ஐஐ, நாட்டுக்கூத்தில் பாடலும் இசையும், வடமராட்சிப் பகுதியில் நாட்டுக்கூத்து சமூக வரலாற்றுரீதியிலான தாக்கங்களும் வெளிப்பாடுகளும் பற்றிய ஆய்வு ஆகிய கட்டுரைகளின் வழியாக இந்நூலில் வடமராட்சிப் பிரதேசத்தில் நிகழ்ந்த நாட்டுக் கூத்துப் பற்றிய விரிவான பல தகவல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.