11393 வேழம் படுத்த வீராங்கனை (நாட்டுக்கூத்து).

அரியான்பொய்கை கை.செல்லத்துரை. முள்ளியவளை: சமன் வெளியீடு, வற்றாப்பளை, 1வது பதிப்பு, சித்திரை 1983. (யாழ்ப்பாணம்: எஸ்.ஜே. அச்சகம், பிரப்பங்குளம் வீதி).

88 பக்கம், விலை: ரூபா 10., அளவு: 21.5×14 சமீ.

வேழம் படுத்த வீராங்கனை.

அரியான்பொய்கை கை.செல்லத்துரை. யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், 2வது பதிப்பு, 2021, 1வது பதிப்பு, சித்திரை 1983. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

xvi, 95 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ., ISBN: 978-624- 5911-02-8.

வன்னிப் பிரதேசத்தில் வேலைப்பணிக்கன் ஒப்பாரியாக இதுவரை காலமும் வழக்கிலிருந்த ஒரு நாட்டாரிலக்கியத்தை கூத்தாக உருவாக்கியுள்ளார் ‘கவிசேகரன்” செல்லத்துரை. வன்னியரின் வீரம், கற்பு, அவற்றுடன் பின்னிப் பிணைந்த வேலப்பணிக்கன் சரிதம் என ஒரு அழகிய பிரதேச நாட்டார் இலக்கியம் இங்கு அவரது சிந்தையில் உருவாகியுள்ளது. வன்னிவள நாட்டில் வன்னியரசாட்சிக் காலத்தில் ஓங்கி உயர்ந்து நின்ற எட்டு ஆலயங்களையும் இந்நாட்டுக்கூத்தில்  சமயோசிதமாக நாடகசபை விருத்தத்தில் இணைத்திருக்கின்றார். குமாரபுரத்தில் சின்ன வன்னியனின் முடிசூட்டு வைபவத்தில் ஆரம்பமாகி வீராங்கனை அரியாத்தை உடன்கட்டை ஏறி வீரசுவர்க்கம் அடையும் இக் காதலர்களின் சரித்திரத்தில் வீரத்தை, தெய்வ பக்தியை, கற்பின் மகிமையை ஆசிரியரின் இலக்கிய ஆளுமை அழகாகப் பதிவுசெய்கின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 30491).

ஏனைய பதிவுகள்

Slotomania 100 percent free Slots

Content Progressive Jackpot I get To experience 100percent free With no Download Why Gamble Online Harbors Although not, for many who’lso are seeking the greatest