11395 விவிக்த பதாவலி: சம்ஸ்கிருத வகைச்சொல் விளக்கச் சொற்களஞ்சியம்.

ச. பஞ்சாட்சர சர்மா (தொகுப்பாசிரியர்). ப.சிவானந்த சர்மா (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், கந்தசாமி கோவிலடி, இணுவில், சுன்னாகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2013. (சுன்னாகம்: சிறீ வித்யா கம்பியூட்டர் பிரஸ், கந்தசாமி கோவிலடி, இணுவில்).

32 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 24.5×17.5 சமீ.

இந்நூல் பல்வேறு தமிழ்ச் சொல்களுக்கு சம்ஸ்கிருத மொழியில் விளக்கம் தருகின்றது. இதனை கலைக்களஞ்சியம் போன்ற ஒரு சொற்களஞ்சியமாகக் கருதலாம். அகராதியில் ஒரு சொல்லுக்குப் பொருள் தேடுவதாயின் ஒருவர் தான் தேடும் சொல்லைத் தெரிந்திருக்கவேண்டும். ஆனால் சொல்லே தெரியாத நிலையில் குறித்த சொல் வேண்டுவோருக்கு இந்நூலின் பிரிவுத் தலைப்புகள் வழிகாட்டியாக அமைகின்றன. அன்றாட வாழ்வில் நமக்குத் தேவையான சம்ஸ்கிருதச் சொற்களுக்கு விளக்கம் தரும் இந்நூல் உடலுறுப்புகள், உடல் ஊனமுற்றோர், கலைஞர்கள், தொழிலாளர்கள், குணம்-செயல்களால் மாறுபட்ட மனிதர்கள், மருந்துச் சரக்குகள், அவசியமான சில ஓஷதிகள், தானியங்கள், உணவுத் தாவரங்கள், உணவுச்சரக்குகள், உலோகங்கள், மிருகங்கள், நீர்வாழ்வன, பாம்புவகை, பறவைகள், ஊர்வன, பறக்கும் சிறு பிராணிகள், வாத்யங்கள், நீர்ப்பூத் தாவரங்கள், தாவர வகைகளும் உறுப்புகளும், பல்வகைத் தாவரங்கள், வசிப்பிடம், திசைகள், பலவிதமான இடங்கள், பாடசாலை, கோவில்களும் விழாக்களும், வீடும் சூழலும், நிறங்கள், நவதானியங்கள், உறவு முறைகள், இரத்தினங்கள் ஆகிய 31 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. அமரர் பிரம்மஸ்ரீ ச.பஞ்சாட்சர சர்மா அவர்களின் பத்தாவதாண்டு சிரார்த்த தினச் சிறப்பு வெளியீடாக 19.10.2013 அன்று இந்நூல் வெளியிடப்பட்டது.

ஏனைய பதிவுகள்

16764 நீலவேணி.

நவம் (இயற்பெயர்: சீனித்தம்பி ஆறுமுகம்). சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன் கிரியேஷன்ஸ், 20/2, சக்காரியா காலனி, முதலாவது தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, ஜனவரி 2012. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்