சி.கணேசையர் (திருத்தமும் உரை விளக்கமும்). யாழ்ப்பாணம்: நா.பொன்னையா, ஈழகேசரி அதிபர், திருமகள் நிலையம், மயிலிட்டி தெற்கு, 1வது பதிப்பு, 1948. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
xxviii, 759+107 பக்கம், விலை: ரூபா 10., அளவு: 21×14 சமீ.
தொல்காப்பிய முனிவரால் இயற்றப்பட்ட தொல்காப்பியத்தின் பொருளதிகாரப் பிரிவின் முதற் பாகமாகிய இந்நூல் அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் ஆகிய முன் ஐந்தியல்களும் நச்சினார்க்கினியமும் இணைந்ததாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இவை புன்னாலைக்கட்டுவன் தமிழ் வித்துவான் பிரமஸ்ரீ சி.கணேசையர் அவர்கள் ஏட்டுப்பிரதிகளோடு ஒப்புநோக்கித் திருத்திய திருத்தங்களோடும் எழுதிய உரைவிளக்கக் குறிப்புகளோடும் வெளிவந்துள்ளது. பின்னைய 107 பக்கங்களும் பின்னிணைப்புகளாகும். ப.1-35 உதாரணச் செய்யுட் குறிப்புரையையும், ப.36-54 உதாரணச் செய்யுள் முதற்குறிப்பகராதியையும், ப.55-70 அரும்பத முதலியவற்றின் அகராதியையும், ப.71-74 சூத்திர முதற் குறிப்பகராதியையும், ப.75-107 சிறுபொழுதாராய்ச்சி என்ற தலைப்பில் சி.கணேசையர் எழுதிய கட்டுரையையும் கொண்டுள்ளன. கணேசையர் எழுதிய சிறுபொழுது என்ற கட்டுரைக்கு மறுப்பாக சி.வீரபாகுப்பிள்ளை அவர்கள் சிறுபொழுதாராய்ச்சி என்ற ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அதற்கு மறுப்பும் விளக்கமும் வழங்கும் கட்டுரையாக சி.கணேசையர் இதனை எழுதிச் சேர்த்துள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11006).