செல்லத்தம்பி சிறீக்கந்தராசா. லண்டன்: இலண்டன் வித்துவான் வேலன் இலக்கிய வட்ட வெளியீடு, 66, Westrow Gardens, Ilford, Essex, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
xxvii, 567 பக்கம், விலை: ஸ்டேர்லிங் பவுண் 20., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0210-06-0.
புலம்பெயர் நாடுகளில் தமிழ் மொழியைக் கற்க விரும்பும் தமிழரல்லாதவருக்கும், ஆங்கில மொழிக்கல்வி பயிலும் இரண்டாம் தலைமுறையினருக்கும்; உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கருவி நூல். இந்நூல் 12 பிரிவுகளாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளது. எழுத்துக்களைக் கற்றல், எழுதப் பழகுதல், சொற்களை ஆக்குதல், சொற்களைத் திரட்டுதல், உச்சரிப்புப் பயிற்சிகள், உரையாடல்கள், கிரகிப்புக்கான பயிற்சிகள், சிறப்பான சொல்லாட்சிகள், மழலைப் பாடல்கள், இலக்கண விடயங்கள், மொழிபெயர்ப்புகள், பொது அறிவுச் செய்திகள், சிறிய கட்டுரைகள், ஒலிபெயர்ப்பு பற்றிய விளக்கம் என்று பல பிரிவுகளாக இவை பிரித்துத் தரப்பட்டுள்ளன. முதலாம் புத்தகம், இரண்டாம் புத்தகம் என இரு பாகங்களாக இந்நூல் பிரிக்கப்பட்டும் உள்ளது. முதல் மூன்று பிரிவுகளையும் முதலாம் புத்தகமாகவும், அடுத்த ஒன்பது பிரிவுகளையும் இரண்டாம் புத்தகமாகவும் ஆசிரியர் பிரித்திருக்கிறார். தமிழைப் படிக்க முயல்பவர்கள் தமிழ் பற்றியும், தமிழர் பற்றியும், தமிழ் இலக்கியம் பற்றியும் தமிழ் வரலாறு பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதால் அந்தச் செய்திகளைத் தாங்கிய கட்டுரைகளையும் உரையாடல்களையும் ஆங்காங்கே சேர்த்திருக்கிறார்.