கி.செ.துரை. டென்மார்க்: கி.செ.துரை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1999. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(3), 16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
நாவிற்கு நல்ல பேச்சுப் பயிற்சிகளாக, சங்க இலக்கியங்கள் முதல் நவீன இலக்கியங்கள் வரை அழகு தமிழின் பெருமையை உணரவைக்கும் செய்யுள்கள், பந்திகள், கருத்துக்கள், மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன், சாம்ராட் அசோகன் போன்ற திரைப்பட வசனங்கள் எனத் தேடித்தொகுத்து இச்சிறுநூலை ஆசிரியர் ஆக்கியுள்ளார். தமிழ்ப் பள்ளிகளில் தமிழ்ப் பேச்சுப் போட்டிகளில் கலந்து 30.6.2002க்கு முன்னர் இவற்றை மனனஞ்செய்து மேடைகளில் ஒப்புவித்துப் பரிசுபெறத் தூண்டும் வகையில் புலம்பெயர் தமிழ் சிறுவர்களுக்காக இத்தொகுப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.