11466 முன்னைச் சிங்கள ஓவியம்.

நந்ததேவ விஜயசேகரா (ஆங்கில மூலம்), ஞானகலாம்பிகை இரத்தினம் (தமிழாக்கம்). கொழும்பு 5: வெளியீட்டுப் பிரிவு, அரச கரும மொழித் திணைக்களம், 5 டீ பொன்செக்கா தெரு, 1வது பதிப்பு, 1965. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்).

xxii, 134 பக்கம், i-xlvi தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18 சமீ.

அனுராதபுரம், தம்பளை, சீகிரி, பொலநறுவை, இந்தகலை ஆகிய இடங்களில் காணப்பட்ட மிகப் புராதன சிங்களச் சுவரோவியங்கள் பற்றிய விரிவானதும் நுணுக்கமானதுமான ஓவியங்களில் காணப்படும் கலைத்துவம் பற்றி மாத்திரமல்லாது அவ்வோவியங்கள் மூலம் புலப்படுத்தப்படும் மானிடவியல் அம்சங்களும் இங்கு நுணுகி ஆராயப்பட்டுள்ளது. சிங்கள ஓவியங்களுக்கூடாக சிங்கள இனம், பண்பாடு, ஆகியவற்றின் வளர்ச்சி பற்றியும் ஆராயும் ஆய்வு இது. தோற்றுவாய் (தலங்களின் வரலாறு, கண்டுபிடிப்பு, இற்றைநாள் நிலை, சிங்கள ஓவியம் பற்றிய ஆராய்ச்சிகள், காலவரையறை), சிங்களர்-பிறநாட்டினர் உறவின் பிற்களம், இந்திய உறவு பற்றிய சிறப்பான குறிப்பு, படிவக்கலையும் சிங்கள ஓவியங்களின் பொருளும், ஓவியங்களுக்குப் பிற்களமாய் அமைந்த சமூகவியல், ஒவியங்கள், சுவர்க்கவி, படிகள் ஆகியவை பற்றிய விவரங்கள் (சிகிரி, இந்தகலை, திம்புலாகலை-புலிகொடையும் மாரா வீதியும், அனுராதபுரம் – உருவன்வலி தாகபையின் கிழக்கு வாசல்கடை, பொலந்நறுவை  வடகோவில், கல்விகாரை, இலங்காதிலக), கலை நுணுக்கும் திரவியமும் – நடையும் ஓவியரும், பொது மலர்வு, சமகால இந்திய ஓவியங்களுடன் சிங்கள ஓவியங்களை ஒப்பிட்டாய்தல்: காலம் ஆகிய தலைப்புகளில் இந்நூல் ஆறு இயல்களில் எழுதப்பட்டுள்ளது. ஆசிரியரால் தன் கலாநிதிப் பட்டத்திற்காக, Early Sinhalese Painting என்ற தலைப்பில் கல்கத்தா பல்கலைக்கழகத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேட்டின் நூலுரு. இதன் ஆங்கில மூலப்பதிப்பு மஹரகம, சமன் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டிருந்தது. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 505). 

ஏனைய பதிவுகள்

17106 நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி.

வள்ளுவதாசன். மாங்குளம்: புலவர் வள்ளுவதாசன், 1வது பதிப்பு, 2019. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம், இல. 85, கந்தசுவாமி கோவில் வீதி). 91 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14 சமீ. திருக்குறள்,