சிவகுருநாதன் கேசவன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: கதிர் வெளியீடு, 28, 5/3, 1வது சப்பல் ஒழுங்கை, 2வது பதிப்பு, ஜுன் 2012, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2010. (கொழும்பு 6: Fast Printers, 289 ½, காலி வீதி).
288 பக்கம், விலை: ரூபா 380., அளவு: 20.5×14.5 சமீ.
2009ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் க.பொ.த. உயர்தர வகுப்புத் தமிழ்ப் பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் தேர்ந்த கவிதைகளின் தொகுப்பு. சுய கற்றலுக்கு ஏற்ற வகையில் பாடல் அறிமுகம், கவிஞர், நூல் அறிமுகம், கதைச் சுருக்கம் என்பவற்றோடு, கடினமான சொற்களுக்கான பொருள், சந்தி பிரிப்பு, கொண்டு கூட்டல், பொருள், விளக்கக் குறிப்புகள், மாதிரி/கற்றல் வினாக்கள், விடைக் குறிப்புகள் என்பவற்றை உள்ளடக்கிய விரிவான பதிப்பு இதுவாகும். செய்யுள்களைக் கற்றல் என்ற முதலாவது பிரிவில் குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, சீபர்ப்பதம், பெரியாழ்வார் திருமொழி, சீறாப்புராணம், தேம்பாவணி, தனிப்பாடல் திரட்டு ஆகியவையும், நவீன கவிதைகளைக் கற்றல் என்ற பிரிவின் கீழ் பாரதியார் கவிதைகள், பாரதிதாசன் கவிதைகள், தேசிகவிநாயகம்பிள்ளை, உமர் கய்யாம் பாடல்கள், கம்பதாசன் கவிதைகள், பிச்சமூர்த்தி கவிதை, மஹாகவி கவிதை, நீலாவணன் கவிதை, புரட்சிக் கமால் கவிதை, முருகையன் கவிதை, சுபத்திரன் கவிதை, குறிஞ்சித் தென்னவன் கவிதை ஆகிய கவிதைகளும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. நூலாசிரியர் இரத்மலானை, கொழும்பு இந்துக் கல்லூரியின் ஆசிரியராவார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 246743).