நக்கீரன் மகள். தமிழ்நாடு: வளரி எழுத்துக்கூடம், 32, கீழரத வீதி, மானாமதுரை 630606, 1வது பதிப்பு, ஆனி 2016. (சிவகாசி 626 123: கந்தகப் பூக்கள் அச்சகம்).
64 பக்கம், விலை: இந்திய ரூபா 80., அளவு: 22×13.5 சமீ.
இலங்கையில் வடமராட்சி கிழக்கிலுள்ள பொற்பதி என்னும் கிராமத்தில் பிறந்து டென்மார்க்கில் வாழும் நக்கீரன் மகள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இது. கவிதைகளின் பகைப்புலம் இலங்கையையும் புலம்பெயர் நாடுகளையும் சுற்றிச் சுழல்கின்றது. சமூக அவலங்கள் பெரும்பாலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வடமராட்சி கிழக்கு பொற்பதி என்னும் கிராமத்தில் பிறந்த இக்கவிஞர், தன் சமூகம் எதிர்கொண்ட அவலங்களையும் சவால்களையும் தனது கவிதைகளின்மூலம் உலகிற்கு வெளிப்படுத்துகின்றார். புலம்பெயர் நாடுகளில் சிற்றிதழ்களிலும் வானொலி-தொலைக்காட்சி ஊடகங்களிலும், முகநூலிலும் இடம்பெற்ற கவிதைகளில் தேர்ந்தெடுத்த கவிதைகளை ஆசிரியர் நூலாக்கியிருக்கிறார். அவரது கவிதைகளின் மொழிநடை, உணர்வுக் கூறுகள், கருத்தியல் ஆகியவை சிறப்பாக அமைந்துள்ளன. சிவமீரா என்ற தனது தங்கையின் நினைவாக இக்கவிதைத் தொகுதியை வெளியிட்டிருக்கிறார்.