முகில்வாணன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், 64 கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2015. (மட்டக்களப்பு: ஓ.கே.பாக்கியநாதன் அறிஞர் சோலை).
(4), 295 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-7654-06-5.
ஆணுக்குப் பெண் அடிமையா என்ற வினாவுடன் முகில்வாணன் முன்வைத்துள்ள இத்தொகுதியின் கவிதைகள் ‘என்றுமே அப்படி அடிமை இல்லை’ என்ற பதிலை உரத்துச் சொல்கின்றன. தான் படித்து அறிந்த நூல்களில் இருந்தும், செய்திகளில் இருந்தும் பெண்கள் தொடர்பான பல்வேறு கருத்துக்களையும் இத்தொகுதியில் எடுத்தாள்கிறார். மரபுரீதியான இலக்கிய நோக்கில் பெண்களை விபரிக்கும் நிலையிலிருந்து விலகி நிற்கும் கவிதைத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. பெண், மணவாழ்வு, கொடுமை, துயரவாழ்வு, காதல், விழித்தெழு, பெண்ணின் பெருமை, ஆதி ஆணா, மதங்களில், வேதத்தில் பெண், வேதம் ஓதியது, கல்வி மறுப்பு, தாழ்ந்த இனம், விவிலியத்தில், கற்பு, அம்மை, அம்மையப்பன், ஆணும் பெண்ணும், தாலி, மாற்றம், மாறிவரும் உலகு, புலம் பெயர்ந்த, புதிய மாது, மறுமலர்ச்சி, அன்புக்கு அடிமை, பிரிவினை, சுதந்திரம், திருமகள் என 28 தலைப்புகளின் கீழ் கவிநடையில் ஆணுக்குப் பெண் அடிமையல்ல என்பதை சங்க இலக்கியம் முதல் மு.வரதராசனார் வரை எடுத்தாண்டு தன் கருத்தை ஆணித்தரமாக முகில்வாணன் முன்வைக்கிறார். முகில்வாணன் (முகில்வாணன் இராசையா, மட்டக்களப்பு, இலங்கை) ஈழத்து தமிழ் கவிஞர். சில காலம் ஜெர்மனியில் வாழ்ந்தவர். இவர் தென் இந்தியாவில் இறையியல் டிப்ளோமா பட்டம் பெற்றவர். திருமறை போதகராகப் பணிபுரிகின்றார்.