11585 உடைந்த மழையில் நனைந்த பட்டாம்பூச்சி.

ராஜகவி றாஹில். (இயற்பெயர்: ஏ.சீ.றாஹில், தொகுப்பாசிரியர்). நிந்தவூர் 05: ஆர்.கே.மீடியா வெளியீடு, 318, புதிய நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (மாவனல்லை: பாஸ்ட் கிராபிக்ஸ் பிரின்டர்ஸ்).

99 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 19×12.5 சமீ.

கவிஞர் றாஹில் எழதிய கவிதைகளின் தொகுப்பு இது. நிந்தவூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ராஜகவி றாஹில் ஆளுமைமிக்க புனைவாளராகவும், ஒரு சிறந்த ஒலிபரப்பாளராகவும் திகழ்கிறார்.கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நிந்தவூரில் பிறந்த இவர் நிந்தவூரில் உள்ள அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். நிந்தவூர் அல் அஷ்ரக் மகா வித்தியாலயத்தில் தனது உயர்கல்வியைப் பெற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதலாம் வருட மாணவனாக இருந்த போதே “தூய்மை தெய்வீகமாகிறது’ என்ற இவரது முதலாவது நாவல் தினகரனில் தொடராக வெளிவந்தது. இந்த நாவல் பாடசாலை வாழ்க்கையை பிரதிபலித்த ஒரு நாவல். 1985 ல் நிந்ததாசன் என்ற பெயர் இவருக்கு பாடசாலை கலாமன்றத்தினால் சூட்டப்பட்டது. 1996 இல் தமிழகத்தில் சந்தப்பா வேந்தர் பட்டமளித்து கௌரவிக்கப்பட்டார். 1997 இல் இலங்கையில் பல்துறைகளுக்கான ரத்னதீப விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து 1998 இல் சாமஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இதே ஆண்டு மொரிசியஸ் தூதுவர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழக மணிவிருது வழங்கப்பட்டது. ராஜ கவி விருது, கவிவாணன் விருதுகள் என்பனவும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. மதுரா ட்ரவல்ஸ் அதிபர் தமிழ்நாடு வி.கே.ரி. பாலன் அவர்களால் இலக்கிய மணி விருது வழங்கி வைக்கப்பட்டது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 249524). 

ஏனைய பதிவுகள்

11323 இஸ்லாமியச் சட்டவியல்: ஒரு சர்வதேசப் பார்வை.

வீரமன்த்ரி (இயற்பெயர்: C.G. Weeramantry), அப்த்-அல்-ஜப்பார் முஹம்மத் ஸனீர் (தமிழாக்கம்). புத்தாநத்தம் 621 310: மாற்றுப் பிரதிகள், த பாப்பிரஸ், 1205, கருப்பூர்ச் சாலை, 1வது பதிப்பு, 2009. (சென்னை 5: மணி ஆப்செட்).