நெடுந்தீவு முகிலன். தெகிவளை: காயத்ரி பப்ளிக்கேஷன், த.பெ.எண் 64, தெகிவளை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2011. (அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை).
104 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×13.5 சமீ., ISBN: 978-955-8741-48-1.
ஏழு கவிதைத் தொகுதிகளை வெளியிட்ட நெடுந்தீவு முகிலனின் எட்டாவது தொகுதியாக இந்நூல் வெளிவந்துள்ளது. பயணங்களின்போது தான் அனுபவித்தவற்றை சுவைகுன்றாது புதுக் கவிதைகளில் வடித்திருக்கிறார். தான் மேற்கொண்ட பயணத்தின்போது ஏற்படும் பிரச்சினைகள் தான் அனுபவித்த சிற்சில சந்தோஷங்கள், பொதுவாக பயணிகளின் கவனயீனங்கள், சமூக அக்கறையின்மை என்பன இவரது கவிதைகளின் களங்களாகின்றன. கவிதைகளுக்கு கட்புலக் காட்சிகளாக உள்ளுர் பஸ்வண்டிப் பயணப் புகைப்படங்களையே பயன்படுத்தியிருப்பது கவிதைகளின் உயிரோட்டத்தைக் கூட்டுவதாயுள்ளது.