ஒலுவில் அமுதன். (இயற்பெயர்: A.அலாவுதீன்). அக்கரைப்பற்று 5: A.அலாவுதீன், 67, புதுப்பள்ளி வீதி, 1வது பதிப்பு, 1999. (அக்கரைப்பற்று: செலெக்ஷன் ஓப்செட் பிரின்டர்ஸ்).
(8), 72 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 18.5×12 சமீ.
ஆதம்லெவ்வை அலாவுதீன் (1956.02.27) அம்பாறை, பொத்துவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை, கல்முனை சாஹிராக் கல்லூரி, ஒலுவில் அல்ஹம்றா மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றார். இவர் ஒலுவில் அமுதன் என்னும் புனைபெயரில் கிட்டத்தட்ட 30 சிறுகதைகளையும், 120 கவிதைகளையும், 40 கட்டுரைகளையும், 4 நாவல்களையும், 6 மெல்லிசைப் பாடல்களையும், 4 வானொலி நாடகங்களையும் எழுதியுள்ளார். இவரது முதலாவது கவிதை 1976 பெப்ரவரியில் ‘நடிப்பு” எனும் தலைப்பில் தினகரனில் பிரசுரமானது. மனக்கோலம் என்ற தொகுப்பைத் தொடர்ந்து வெளிவரும் இரண்டாவது கவிதைத் தொகுப்பு ‘மரணம் வரும் வரைக்கும்’ என்பதாகும். கலையாத மேகங்கள் என்ற சிறுகதைத் தொகுதியையும், நாம் ஒன்று நினைக்க, கரையைத் தொடாத அலைகள் போன்ற நாவல்களையும், மனங்களிலே நிறங்கள், கூடில்லாத குருவிகள் ஆகிய சிறுகதைகளையும் இவர் எழுதியுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21071).