முல்லைப் பார்த்தா (இயற்பெயர்: கனகரட்ணம் பார்ததீபன். கனடா: படைப்பாளிகள் உலகம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2016. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172, மில் வீதி).
xvi, 64 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 220., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-43216-0-1.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையில்; மூன்றாம் வருட மாணவனாகப் பயிலும் முல்லைப் பார்த்தாவின் முதலாவது கவிதைத் தொகுப்பு. இலகுநடையில் எளிமையான புதுக்கவிதை வடிவில் எழுதப்பெற்ற 63 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. செங்குயில் சிறகொடிந்தாள் என்ற தலைப்பில் புங்குடுதீவில் மே 13, 2015இல் கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் கொல்லப்பட்ட வித்தியா என்ற சிறுமி பற்றிய முதலாவது கவிதையில் தொடங்கி, சுடுதிப்போர், மடிதந்த தாய், மலர்வாடைக் கன்னி, மனிதவுரிமை, கரிஷ்ணவியின் கதறல், அன்றொருநாள் முள்ளியில், கந்தகத் துகள்கள், மாண்ட அவ்வுயிர்கள், வெந்த கடலை, உடும்புண்டால், அரசடிப் பிள்ளையார், தலைசாய்க்கிறேன் அவ்வுயிர்களுக்கே, கந்தகக் காற்று, செஞ்சோலைச் சிறார்கள், துயரம், ஏமாற்றம், இசைத்த குயில்கள், கொடுஞ்சீனன் அரசு, சட்டமென்னடா சரித்திரமென்னடா, மகளிர் தினம், எரியுண்ட என் அப்பன் சுடுசாம்பல் என பல்வேறு தலைப்புகளில் இவ்வுணர்வுக் கவிதைகள் விரிகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61514).