சி.சிவசேகரம். கொழும்பு 6: தேசிய கலை இலக்கியப் பேரவை, 571/15, காலி வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2010. (கொழும்பு: வேர்ள்ட் விஷன் கிராப்பிக்ஸ்).
80 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-8637-29-6.
இதிலுள்ள கவிதைகளின் அழுத்தம் முள்ளிவாய்க்கால் அவலங்களின் பின்னைய அண்மைய ஈழத்து நிகழ்வுகளின் மீதானது. இத்தொகுதியிலள்ள கவிதைகள் சில தமிழ்ச் சமூக எல்லைக்கு வெளியே சென்று அக நிலைமைகளைப் புறவுலகுடன் உறவுபடுத்துவன. மரபுசார்ந்த சில கவிதைகளுக்கும் மேலாக நாட்டார் சந்தங்களும் பயன்பட்டுள்ளன. சி. சிவசேகரம் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். கவிதைகள், விமர்சனங்கள், அரசியற் கட்டுரைகள் மற்றும் கவிதை மொழிபெயர்ப்புக்கள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். இவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றிவருகின்றார். மேலும் எந்திரவியல் பிரிவின் தலைவராகவும் பதவிவகிக்கிறார். 2002 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு ஆளுனர் விருது இவருக்கு வழங்கப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50983).