11725  ஜன்னல் ஓரத்து நிலா.

த.ரூபன். திருச்சி 620003: இனிய நந்தவனம் பதிப்பகம், எண் 17, பாய்க்கார தெரு, உறையூர், 1வது பதிப்பு, ஜுலை 2015. (சென்னை: சாய் தென்றல் பிரின்டர்ஸ்).

(15), 128 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 80., அளவு: 21.5×14 சமீ.

ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து மலேசிய மண்ணில் பொருளாதாரத் தேடலுக்காக வாழ்வியலை அமைத்துக்கொண்ட இக்கவிஞரின் மனதில் தான் பிறந்த மண்ணின் மணம் மாறாமல் இருப்பதைக் கவிதைகளில் காண்கின்றார். ஈழம் குறித்த கவலை, தாய் மகன் உறவு, காதல் அனுபவம், உழைப்பு, கல்வி, விவசாயம், பெண்கள் முன்னேற்றம் எனப் பல கருத்தாடல்களை இக்கவிதைகளில் முன்வைப்பதுடன் இக்கவிஞர் தன்னைப் பாதித்த நிகழ்வுக் குறிப்புகளையும், சமகால சமூக அவலங்களையும், தான் பார்த்து வியந்த, உணர்ந்த சம்பவங்களையும் அனுபவங்களையும் தன் கவிதைகளுக்கான பாடுபொருளாகக் காண்கிறார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 249076). 

ஏனைய பதிவுகள்

13778 எந்தையும் நானே (நாவல்).

ஆணி (இயற்பெயர்: ஆனந்த குமாரசாமி இராமநாதன்). சென்னை 600094: மித்ர பிரசுரம், 20/2, ஜக்கரியா காலனி, முதல் தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, பெப்ரவரி 2014. (சென்னை 600094: மித்ர பிரசுரம், 20/2, ஜக்கரியா