வீணைமைந்தன் (இயற்பெயர்: கே.ரி.சண்முகராஜா). கனடா: வீணைக்கொடி வெளியீட்டகம், 425, Boulvard Hymam, Dollard-Des-Ormeaux (Quebec), H9B 1M1, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2015. (யாழ்ப்பாணம்: நோபிள் பிறின்ரேர்ஸ், இல. 817, ஆஸ்பத்திரி வீதி).
xvi, 88 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×12 சமீ., ISBN: 978-955-42202-0-1.
கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் ஆசிரியரின் வானொலி, மேடை நாடகங்களின் தொகுப்பு. வீரன் வாஞ்சிநாதன், கவியின் காதல், காதல் ஜோதி, என்று தணியும் இந்த சுதந்திர தாகம், பார்த்திபன் கனவு, இராஜ தண்டனை ஆகிய ஆறு நாடகங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. வீரன் வாஞ்சிநாதன், மண்ணுக்காகத் தன் இன்னுயிர் ஈந்த போராளிகளைப் பற்றியது. கவியின் காதல், வரலாற்றுக் காதலர்களான அம்பிகாபதி-அமராவதி ஆகியோரின் காதல் வாழ்வின் கடைசி அத்தியாயத்தைச் சொல்கின்றது. காதல் ஜோதி, சக்கரவர்த்தி அக்பரின் ஆணவத்திற்குப் பலியான அனார்கலீ-சலீம் காதல்ஜோடியின் வாழ்வின் சில பக்கங்கள் பற்றியது. என்று தணியும் இந்த சுதந்திர தாகம், போராட்டக் கருவை மையமாகக் கொண்ட மற்றொரு நாடகம். பார்த்திபன் கனவு, பாசத்துக்கு மட்டும் தான் பெண் என்ற சமூகப் பார்வையிலிருந்து விலகி போர்ப் பாசறைக்கும் வீரப்பெண் தேவை என்ற கருத்தினை வலியுறுத்துகின்றது. இறுதி நாடகமான இராஜ தண்டனை, சக்கரவர்த்தி அசோகனின் வரலாற்றைச் சொல்கின்றது. மானிப்பாயில் பிறந்த கே.ரி.சண்முகராஜா, சஙகானையில் வளர்ந்து, காங்கேசன்துறையில் தன் கல்வியைப் பெற்றவர். தற்போது கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார்.