வி.நடராஜக் கவிராயர். கொழும்பு: சரஸ்வதி புத்தகசாலை, 175, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, 1934. (மதுரை: முருகன் புக் டிப்போ).
64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
T.P.ராஜலெட்சுமி, K.M.சுந்தராம்பாள், S.G.கிட்டப்பா, S.V.சுப்பையா பாகவதர், P.S.வேல்நாயர், ஆரியகான K.S.அனந்த நாராயண ஐயர், P.S.கோவிந்தன் இவர்கள் பாடி நடித்துவந்த ‘நவீன கோவலன் சரித்திரம்’ என்ற நாடகத்தின் நூல்வடிவம் இது. நவீன நாடக ரஞ்சிதமலர் தொடரில் இரண்டாவது நூல். காவிரிப்பூம் பட்டினம், திருக்கடையூர், பாண்டிநாடு ஆகியவை நாடகத்தின் நிகழிடங்களாகும். மாச்சோட்டான் செட்டியாரின் மகன் கோவலன், மாணாக்கன் செட்டியார் மகள் கண்ணகி, திருக்கடையூர் தாசியான மாதவி ஆகியோர் பிரதான பாத்திரங்களாவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21800).