சொப்கொக்கில்ஸ் (கிரேக்க மூலம்), ஈழத்துப் பூராடனார் (தமிழாக்கம்), எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா: ஜீவா பதிப்பகம், 1108 Bay Street, Toronto, Ontario M5S 2W9, 1வது பதிப்பு, ஆவணி 1990. (கனடா: ரிப்ளெக்ஸ் அச்சகம், 1365 Midway Blvd, Unit No.24, மிஸிஸாகா L5C 2J5, ஒன்ராரியோ).
xxviii, 203 பக்கம், புகைப்படம், விலை: கனேடிய டொலர் 20., அளவு: 21×13.5 சமீ.
ஆதிக் கிரேக்கக் காவியத் தொடரில் நான்காவதாக வெளிவந்துள்ள இந்த மொழிபெயர்ப்புத் தொகுதியில் கிரெக்கக் கவிஞரான சொப்கொக்கில்சின் நான்கு நாடகங்களின் தமிழாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. ஈழத்துப் பூராடனார் என அழைக்கப்படும் க. தா. செல்வராசகோபால் (13 டிசம்பர், 1928 – 21 டிசம்பர் 2010) ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர். இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும் பதிப்பித்தும் உள்ளார். புலம் பெயர்ந்து கனடாவில் வாழ்ந்தவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11317).