த.சிதம்பரப்பிள்ளை, வி.ஜெகநாதன். திருக்கோணமலை: கீழைத்தென்றல் கலாமன்றம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2000. (கொழும்பு: கீதா பப்ளிக்கேஷன்ஸ்).
iv, 49 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 18.5×13 சமீ.
இந்நூல் இரண்டு ஆக்கங்களைக் கொண்டது. இரண்டும் ஏதோ ஒரு வகையில் ‘சபதமிடுதல்’ என்ற விடயத்தில் ஒன்றுபடுகின்றன. முதலாவது த.சிதம்பரப்பிள்ளை எழுதிய பாஞ்சாலி சபதம் என்ற நாட்டுக்கூத்து. இரண்டாவது காதல் நெஞ்சங்கள் என்ற தலைப்பில் வி.ஜெகநாதன் எழுதிய கவிதா நாடகம். முன்னையது முதல் 13 பக்கங்களையும் இரண்டாவது 14 -49 வரையிலான பக்கங்களையும் கொண்டமைந்துள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 29023).