ராஜி வல்லிபுரநாதன். நியூசிலாந்து: ராஜி வல்லிபுரநாதன், 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xxii, 161 பக்கம், ஓவியங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.
யாழ்ப்பாணம் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் திருமதி ராஜி வல்லிபுரநாதன். அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழ்பவர். இவரது முதலாவது சிறுகதையான வாழவைத்த தெய்வம் கலைச்செல்வி மாத இதழில் வதனி என்ற புனைபெயரில் வெளிவந்தது. ஜேர்மனியிலிருந்து வெளிவந்த இந்து மகேஷின் பூவரசு சஞ்சிகையிலும் நியுசிலாந்தின் ஓக்லாந்தின் உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தமிழ் மஞ்சரி செய்திப் பத்திரிகையிலும் இவரது சில ஆக்கங்கள்; பிரசுரமாகியுள்ளன. பன்னாட்டு தமிழ் ஊடகங்களிலும் இவர் எழுதிய சிறுகதைப் படைப்புக்களின் தொகுப்பாக இந் நூல் வெளிவந்துள்ளது. தமிழர்களின் வாழ்வில் ஏற்படும் அன்றாட சமுதாயப் பிரச்சினைகளே இவரது கதைகளின் கருவாக உள்ளன. தமிழரின் குறுகிய மனப்பான்மையும் அதனால் ஏற்படும் சிக்கல்களும் பெரும்பாலான கதைகளின் பேசுபொருளாகின்றன. கதைகளின் முடிவுகள் பெரும்பாலும் அறவாழ்வையும் நீதியையும் வலியுறுத்துகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61249).