பொலிகை ஜெயா. அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, மார்ச் 2016. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
xii, (2), 112 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-4676-40-4.
சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்ந்து வாழும் பொலிகை ஜெயா (P.Jeyakkody,Flur weg 12, 2504. Biel/Bienne, Switzerland) எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. 57ஆவது ஜீவநதி வெளியீடாக nளிவந்துள்ளது. விடிவை நோக்கிய பயணத்தில் வலிதாங்கிய வடுக்கள், வேற்றாரின் கோரத் தாண்டவம், மகிழ்ச்சியின் எல்லை வானம் வரை, பறிகொடுத்த பின்பும் வாழத் துடிப்பவர்கள், தூரதேச தொலைபேசி அழைப்பு, காலத்தால் செய்த நன்றி, எதிர்பார்ப்புக்கள், வாய்க்கு எட்டா மீன் குழம்பு, மண்ணின் மீது நேசம், சுதந்திர சீரழிவு ஆகிய 10 சிறுகதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 249283).