11854 ஹாத்திம்தாய் பாகம் 1.

ஸீ.எம்.ஏ.அமீன். கலகெடிஹேன: ரேஷ்மா பதிப்பகம், 348/1, வரபலான வீதி, திஹாரிய, 2வது திருத்திய பதிப்பு, ஒக்டோபர் 2004, 1வது பதிப்பு, 1997. (கொழும்பு 11: நிசான் பிரின்டர்ஸ், 64N, பீர் சாஹிபு வீதி).

(6), 82 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 19.5×13.5 சமீ.,  ISBN: 955-95661-8-0.

ஹாத்திம்தாய்.

ஸீ.எம்.ஏ.அமீன். கலகெடிஹேன: ரேஷ்மா பதிப்பகம், 348/1, வரபலான வீதி, திஹாரிய, 1வது பதிப்பு, 1997. (கொழும்பு: க்விக் கிராப்பிக்ஸ் பிரின்ட்).

(6), 82 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 19.5×13.5 சமீ.,  ISBN: 955-95661-3-X.

ஹிந்தி மொழியில் வெளிவந்த ஹத்திம் தாயீ என்ற நாவலின் தழுவலாக இந்நூல் வெளிவந்துள்ளது. ஹ{ஸ்ன்பானு என்ற அழகிய இளநங்கை தனது ஏழு கேள்விகளுக்கும் பதில் அளிப்பவரையே மணம் முடிப்பதாகக்கூறி அக்கேள்விகளை ஒரு கற்றூணில் பொறித்து வைக்கிறாள். அவளை நாடி வந்த பலரும் அக்கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாது ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். குவாரிஸ்ம் நாட்டு இளவரசனான முனீர்சானியும் அவர்களுள் ஒருவன். பதில் தெரியாத சோகத்தில்  விரக்தியுடன் காடுகளில் அலைந்து புலம்பித்  திரிந்த அவனை அங்கு வேட்டையாட வந்த யெமன் நாட்டு இளவரசன் ஹாத்திம் சந்தித்து அவனுக்கு உதவ முன்வருகிறான். அதன் படி முதலிரு கேள்விகளுக்கும் பதிலளிப்பது வரையில் இந்நூலின் முதலாம் பாகம் வளர்கிறது. இந்நூலின் இரண்டாம் பாகம் 1999இல் வெளிவந்தது. நூல்தேட்டம் பதிவிலக்கம் 7821. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 119005). 

ஏனைய பதிவுகள்