11905 நயினை ஞானமுத்து: ஸ்ரீமத் முத்துக்குமார சுவாமிகள்.

சி.பத்மநாதன். நயினாதீவு:  வே.சிவபாதமணி, சோமாஸ்கந்த ஈஸ்வரர் ஆலயம், 1வது பதிப்பு, ஜனவரி 2002. (யாழ்ப்பாணம்: பத்மாஸ், 28/1 ஓட்டுமடம் வீதி).

iv, 90 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×15 சமீ.

நயினை ஞான முத்து என்று அழைக்கப்படும் ஸ்ரீமத் முத்துக்குமார சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு இந்நூலில் கூறப்பட்டுள்ளது. சுவாமிகளின் பூர்வீகத்தையும்,  சுவாமிகளுடன் தொடர்புடைய சில மெய்யடியார்களைப் பற்றி ஆசிரியர் அறிந்துகொண்ட சில தகவல்களையும், சுவாமிகளைப் பற்றி சில நூல்களில் கிடைத்த தகவல்களையும் நேரில் தெரிந்தவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட தகவல்களையும் சேர்த்து இந்நூலை ஆக்கியுள்ளார். யோகசித்தனான நயினாதீவு சுவாமிகளால் பாடப்பட்ட சில அருட்கவிப் பாடல்களும், அவர்மேல் அன்பர்கள் பாடிய பாடல்களும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 22999).

ஏனைய பதிவுகள்