11933 ஓவிய மாமணி: வீ.கே (வி.கனகலிங்கம்).

பொன்விழா மலர்க் குழு. கொழும்பு: தாய்நாடு பதிப்பகம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1990. (கொழும்பு 12: யுனைட்டெட் மேர்ச்சன்ட்ஸ் லிமிட்டெட், 71, பழைய சோனகத் தெரு).

(2), 32 பக்கம், விலை: அன்பளிப்பு, அளவு: 19×14 சமீ.

எழுபது வயதைக்கண்ட ஈழத்தின் பிரபல ஓவியரான விசுவலிங்கம் கனகலிங்கம் அவர்களின் ஓவியவாழ்வின் பொன்விழா 19.08.1990 அன்று கொழும்பு, கொள்ளுப்பிட்டி சசக்காவ மண்டபத்தில் இடம்பெற்ற வேளை வெளியிடப்பட்ட சிறப்பு மலர். 28.09.1920இல் ஆனைக்கோட்டையில் பிறந்த இவர், ஓவிய மன்னர், வர்ணவாரிதி, ஓவியமாமணிஆகிய பட்டங்களைப் பல்வேறு அமைப்புகளின் வாயிலாகப் பெற்றவர். இம்மலரில் வேலணை வீரசிங்கம், எஸ்.டி.சிவநாயகம், யோகா பாலச்சந்திரன், அன்னலட்சுமி இராஜதுரை, ஆ.சிவநேசச் செல்வன் ஆகியோரின் மலரும் நினைவுகளைத் தாங்கிய கட்டுரைகளும், வீ.க. எழுதிய ‘சுமதி’ என்ற சிறுகதையும், ‘எப்படி ஓவியரானேன்?’ என்ற சுயசரிதைக் கட்டுரையும் இடம்பெற்றுள்ளன. ‘சுமதி’ என்ற கதை அவர் வீரகேசரி நிறுவனத்தில் பணியாற்றியபோது லிங்கம் என்ற புனைபெயரில் எழுதப்பெற்று 19.11.1944இல் வீரகேசரி வாரமலரில் பிரசுரமாகியது. அக்காலகட்டத்தில் லிங்கம், திருவாதிரை ஆகிய பெயர்களில் இவர் பல சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இந்நூலுக்கானஅட்டைப்பட ஓவியம் அவரது மகன் கண்ணன் அவர்களால் தீட்டப்பட்டுள்ளதுடன் இந்நூல் இலவசமாக எஸ்.பீ.சாமி அவர்களால் விநியோகிக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10515).

ஏனைய பதிவுகள்

Finest Web based casinos 2024

Content Caesars Palace On-line casino Overview What is the Finest Legitimate Online casino? Foxy Game Expert Online gambling Video game Instructions NextGen basic given legal