11956 தம்பி ஜெயத்திற்கு: கடிதம் இரண்டு.

காசி. ஆனந்தன். கேளம்பாக்கம் 603103: காசி ஆனந்தன் குடில், 4/202, ஈசுவரன் கோவில் தெரு, தையூர், 1வது பதிப்பு, ஜனவரி 2017. (சென்னை 600005: கிளாசிக் அச்சகம்).

158 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 18×12 சமீ.

இந்திய அமைதிகாக்கும் படையின் சுற்றிவளைப்பின்போது அதில் அகப்பட்டு விடுதலைப் புலிகள் அமைப்பின் இயக்க விதிகளுக்கமைய சயனைற் நஞ்சருந்தி 10.9.1988 இல் மடிந்தவர் சிவஜெயம் என்ற இயற்பெயர் கொண்ட மேஜர் சந்திரன். இந்நூல் வீரமரணமடைந்த போராளியான மேஜர் சந்திரனுக்கு அவரது தமையனார் காசி அனந்தன் எழுதிய இரண்டாவது கண்ணீர்க் கடிதமாக அமைகின்றது. இது வெறும் கடிதமாக அல்லாமல் ஒரு ஈழ விடுதலைப் போராளியின் குடும்ப வரலாறு, அவன் சார்ந்த ஒரு விடுதலைப் போராட்டத்தின் வரலாறு, என விரிகின்றது. ஈழத்தின் அறவழிப் போராட்டத்தின் முடிவில் வெடித்த புலிகளின் மறவழிப் போராட்டத்தின் தொடக்க வரலாறு இது. இந்தியாவைத் தமிழீழத்தின் பக்கம் இறுக அணைத்துத் தமிழீழ விடுதலைப் போரை முன்னெக்கவேண்டிய இன்றியமையாத் தேவையை இக்கடிதம் வலியுறுத்துகின்றது. அடக்குமுறையாளரான சிங்கள இனவெறி ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலைபெற்று இறையாண்மையுள்ள தமிழீழ அரசை நிறுவுவதே தமிழீழ மக்கள் எதிர்பார்க்கும் ஒற்றைத் தீர்வு என அழுத்தமாகச் சொல்கிறார் கவிஞர். (இந்நூலின் முதலாம் பாகத்துக்கான நூல்தேட்டம் பதிவு இலக்கம் 7877).

ஏனைய பதிவுகள்