ஷண்முகன். அவுஸ்திரேலியா: ஷண்முகன், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2014. (அவுஸ்திரேலியா: டெக் பிறஸ்).
(2), 120 பக்கம், வரைபடங்கள், அட்டவணைகள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×18 சமீ.
இலங்கை பிரித்தானிய ஆட்சியில் இருந்து விடுபட்ட 1948-ம் ஆண்டிலிருந்து ஈழத்தமிழர் சார்ந்த சரித்திரச் சான்றுகளின் அழிப்பு நடவடிக்கைகள் முனைப்புப் பெற்றது மட்டுமன்றி அவர்கள் தொடர்பான வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டும் ஈழத் தமிழருக்குப் பாதகமான முறையில் திரிக்கப்பட்டும் வந்திருப்பதை வலியுறுத்தும் ஆசிரியர், 200ஆண்டுகளுக்கு முன்னர் பெருந் தோட்டங்களில் பணியாற்ற அழைத்துவரப்பட்ட இந்தியத் தமிழரின் வருகையை ஈழத்தமிழரின் உருவாக்கமாகப் புரிந்துகொள்ளும் இந்திய ஐரோப்பிய வரலாற்று மாணவர்களுக்கு, இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்னர் கௌதம புத்தர் இலங்கைக்கு வருகைதந்தபோது இலங்கை ஒரு பூரணமான தமிழ் நாடாகவே இருந்திருக்கிறது என்ற கருத்தை முன்வைக்கிறார். இந்நூல் ஈழத்தமிழர் வரலாறு, அனுராதபுரமும் தமிழ் மக்களும், இலங்கையின் வடமேல் மாகாணத் தமிழர்கள், இலங்கை முஸ்லிம்கள், ஈழத்தமிழரும் கேரளமும், இலங்கையும் சிங்கள மக்களும், கிரந்த லிபியும் சிங்களமும், ஈழத்தமிழரின் தற்போதைய நிலைமை, ஈழத்தமிழரின் எதிர்காலம் ஆகிய ஒன்பது இயல்களில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 245673).