10023 காலம்: செல்வா கனகநாயகம் நினைவுச் சிறப்பிதழ்.

செல்வம் (இதழாசிரியர்). கனடா: காலம், செல்வம் அருளானந்தம், 84, Coleluke Lane, Markham, Ontario, L3S 0B7, 1வது பதிப்பு, மார்ச் 2015. (இந்தியா: சென்னை 600 087: வீ.ஆர்.கிராப்பிக்ஸ், வளசரவாக்கம்).

88 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 28×21.5 சமீ., (காலம் இதழ் 46, மார்ச் 2015).

கனடாவிலிருந்து வெளிவரும் காலம் சஞ்சிகையின் சிறப்பிதழாக வெளிவந்துள்ள இவ்விதழில் வழமையான அம்சங்களுடன், சிறப்புக் கட்டுரைகளாக சமகாலத்தில் மறைந்த ஈழத்துத் தமிழ் அறிஞரான செல்வா கனகநாயகம் அவர்களின் நினைவுகளையும் அமரர் எஸ்.பொன்னுத்துரை அவர்களின் நினைவுகளையும் தாங்கிய படைப்பாக்கங்கள் சிறப்பிடம் பெற்றுள்ளன. அமரர் செல்வா கனகநாயகம் பற்றிய நினைவு மீட்டல்களை சச்சிதானந்தன் சுகிர்தராஜா, இ.பாலசுந்தரம், அமுது ஜோசப் சந்திரகாந்தன், நரசய்யா ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். செல்வா கனகநாயகம் பற்றிய எஸ்.சிவலிங்கராஜாவின் கவிதை ஒன்றும், சோ.பத்மநாதனும் புனைகவிதையும் என்ற தலைப்பில் செல்வா கனகநாயகம் எழுதிய  ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கமும் இடம்பெற்றுள்ளன. எஸ்.பொ. அவர்கள் பற்றிய பதிவில் யாழ்ப்பாண எண்ணம் என்ற தலைப்பில் ம.செல்வராஜா அலெக்சாண்டர் அவர்களும், எஸ்பொவும் நானும் என்ற தலைப்பில் ஆணி என்ற புனைபெயரில் ஒரு எழுத்தாளரும் எஸ்.பொ. பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

ஏனைய பதிவுகள்

Kasyno Online Mr Bet Casino

Content Kasyno aztec treasure | Najistotniejsze Bonusy Kasynowe Online W polsce Rodzaje W Rozstrzygnięcie Kłopotów Spośród Kasynem Sieciowy Kasyna Online Nadzieja wygrania dodatkowych gotówki natychmiast.