ஏ.பி.எம்.இத்ரீஸ். வாழைச்சேனை 05: உயிர்ப்பைத் தேடும் வேர்கள், மஹ்மூத் ஆலிம் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2007. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).
206 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14.5 சமீ., ISBN: 955-99649-0-9.
அதிகாரம், சார்பியம், ஒழுங்கவிழ்ப்பு, பன்மைத்துவம், பிம்பமையம், உம்மத் தேசம், பிக்ஹ{ல் இத்திலாப், பிக்ஹ{ல் அகல்லியா, சமூக சேவை, ஊடகம், தத்துவம், கற்போர் கையில் கல்வி, மருத்துவம் போன்ற தலைப்புகளில் இந்நூல் உரையாடலைத் தொடக்கிவைக்கின்றது. கட்டுரைகள், உரைகள் ஆகிய இரு பிரிவுகளில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இந்நூலில் கட்டுரைகள் பிரிவில் அங்கீகரிக்கத்தக்க கருத்து வேறுபாட்டிற்கும் கண்டிக்கத்தக்க பிரிவினைக்கும் மத்தியில் இஸ்லாமிய எழுச்சி, முஸ்லிம் சிறுபான்மைக்கான பிக்ஹை நோக்கி, இஸ்லாத்தில் மகப்பேற்றுத்துறையின் முக்கியத்துவம், இந்தியத் துணைக்கண்டத்தின் பேரோசை ஓய்ந்துவிட்டது, சார்பியம், ஒழுங்கவிழ்ப்பு, அதிகாரம் பற்றிய இரண்டு கண்ணோட்டங்கள், இஸ்லாமும் பன்மைத்துவமும் உம்மத்-தேசம்: உறவும் முரணும் ஆகிய ஒன்பது கட்டுரைகள் இடம்பெறுகின்றன. உரைகள் என்ற பிரிவில் இயக்கமயமாதல் ஏள மக்கள்மயமாதல், கற்போர் கையில் கல்வி, பிம்பமைய வழிபாடும் இஸ்லாமியப் புலமைத்துவ எதிர்ப்பும், மஸ்னவி: ஆதியுடன் நம்மைப் பிணைக்கும் அற்புதப் படைப்பு, இஸ்லாமிய நிலைப்பட்ட ஊடக வரலாற்றெழுதுகை, எமது தத்துவம், சமூக சேவை ஊடாக தஃவா ஆகிய ஏழு உரைகள் இடம்பெற்றுள்ளன.