10195 ஊழிக்காலப் பறவை: சமூகவியல் கட்டுரைகள்.

அன்புவழியூர் ச.திருச்செந்தூரன். திருக்கோணமலை: அம்மா பதிப்பகம், 31/1, சமாது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஆனி 2014. (திருக்கோணமலை: அஸ்ரா பதிப்பகம், இல. 43, திருஞானசம்பந்தர் வீதி).

95 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-7520-01-8.

மனிதகுலத்தை மேம்படுத்தும் இந்துப் பண்பாடும் நாகரீகமும், அன்றைய தமிழரும் இன்றைய தமிழரும், வடக்கு மக்களின் எதிர்பார்ப்பும் தார்மீகக் கடமையும், அஸ்தமிக்கப்போகும் கிழக்கு, அன்றைய திருமணமும் இன்றைய திருமணமும், உலகை அச்சுறுத்தும் குடிதண்ணீர்ப் பிரச்சினை, பாரை வாட்டும் பசியும் பட்டினியும், கட்டுப்படுத்தப்படவேண்டிய உளவியல் தாக்கங்கள், சீரழிவை உருவாக்கும் வெளிநாட்டு மோகம், சீரழிக்கும் சினிமா கலாச்சாரம், வாழ்வை மறந்த மனிதனும் நினைவூட்டும் பண்டிகைகளும், நீங்கள் ஏன் இன்னும் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்? நோயாளியாகும் நாடு, வளரும் சுற்றுலாவும் கழரும் சிற்றாடையும், ஓரங்கட்டப்பட்ட முதல் மனைவி, சாதனை படைக்கும் தமிழ் மாணவர்கள், உறவுகள் இல்லா உலகம் வேஸ்டய்யா ஆகிய 17 சமூகவியல் கட்டுரைகளின் தொகுப்பு. தமிழகத்தில் எட்டயபுரத்தில் பிறந்த சரவணபவ ஆனந்தம் திருச்செந்தூரன் தனது ஆரம்ப,  இடைநிலைக் கல்வியைத் தமிழகத்தில் கடையநல்லூரில் ஸ்ரீ உலகா உயர்நிலைப்பள்ளியிலும், பின்னர் தாயகம் திரும்பியதும் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை வகுப்பை திருக்கோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியிலும், பல்கலைக்கழகக் கல்வியை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் பெற்றவர். தனது முதலாவது கவிதையை தமிழகத்தில் அகதிமுகாமில் இருந்தவாறே போட்டியொன்றிற்காக எழுதி முதற் பரிசையும் தட்டிக்கொண்டவர். அன்று முளைவிட்ட எழுத்தார்வம் திருக்கோணமலையில் ‘நீங்களும் எழுதலாம்’ சஞ்சிகையினூடாகக் களம் கண்டது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 84339).

ஏனைய பதிவுகள்