அ.இராபர்ட். யாழ்ப்பாணம்: அ.இராபர்ட், சென் தோமஸ் வீதி, மாதகல், 1வது பதிப்பு, மாசி 1992. (சென்னை 600116: விருதை ஆர்ட் பிரின்டர்ஸ், போரூர்).
(5), 25 பக்கம், விலை: இந்திய ரூபா 8.00, அளவு: 17.5×12.5 சமீ.
பெண் சமத்துவத்தின் பரிமாணங்களை இந்நூல் இறையியல், உளவியல் கண்ணோட்டத்தில் தெளிவுபடுத்தகின்றது. பெண்களுக்குச் சம உரிமை இல்லாமை, பெண்களை இழிவாக நடத்துதல், பெண்சிசுக்கள் கொலை போன்ற அட்டூழியங்கள் சமுதாயத்தில் பல்லாண்டுகளாக இருந்த வந்துள்ளன. கிறிஸ்தவர்களும் இதற்கு விதிவிலக்கல்லர். பெண்கள் பற்றி இறைவார்த்தையின் போதனை என்ன என்பதை கிறிஸ்தவ தூதர்கள் ஆங்காங்கே தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். பெண்களைப்பற்றி யூத மரபுகள் உயர்ந்த கொள்கைகளைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் இறைமகன் யேசு கிறீஸ்து அம்மரபுகளை உடைத்தார். பெண்களின் உரிமைகளை நிலைநாட்டினார். குறிப்பாக நற்செய்தியாளர் லூக்கா தொகுத்த நற்செய்தியில் பெண்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர். பெண்களைப்பற்றி லூக்கா நற்செய்தி முழங்கும் கருத்துக்களைக் கோர்வையாகவும் தெளிவாகவும் இறையியல் கண்ணோட்டத்துடன் அ.இராபர்ட் இந்நூலில் விளக்கியிருக்கின்றார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 105523).