சம உரிமை இயக்கம். கோட்டே: சம உரிமை இயக்கம், 402/2, தலவத்துகொட பாதை, மாதிவெல, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(2), 28 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 21×14.5 சமீ.
சமத்துவமின்மையை நிர்மாணித்த அடித்தளத்தைத் தகர்க்கக்கூடியதானதொரு புதிய சமூக முறையொன்றின் மூலமாக மாத்திரமே அனைத்து ஒடுக்கப்பட்ட தேசியப் பிரஜைகளுக்கும் சம உரிமையைப் பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறான பரந்த போராட்டத்திற்குள் அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் நோக்கத்தோடு கட்டியெழுப்பப்படும் சம உரிமை இயக்கத்தின் அடிப்படை நோக்கமாக இருப்பது சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை ஒன்றிணைத்து மக்கள் தொகையில் குறைந்த விகிதாசாரத்தைக் கொண்ட தமிழ் முஸ்லிம் உள்ளிட்ட ஏனைய இன மக்களுக்கும் சம உரிமையைப் பெற்றுக்கொள்ளும் போராட்டத்தை ஆரம்பிப்பதாகும். இந்நோக்குடன் உருவாக்கப்பட்ட சம உரிமை இயக்கத்தின் கொள்கைப் பிரகடனமாக இந்நூல் அமைகின்றது.