10234 நாணயப் பொருளியல்: BA பொருளியல் சிறப்புக் கலைமாணிக்கான பாடநூல்.

செ.சந்திரசேகரம். யாழ்ப்பாணம்: குடாநாட்டுப் பதிப்பகம், 34/2, இராமநாதன் வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜனவரி 2013. (யாழ்ப்பாணம்: குடாநாட்டுப் பதிப்பகம், திருநெல்வேலி).

(10), 200 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 500., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-44890-2-8.

இந்நூலானது, பணம் பொருளதாரத்தில் எப்பங்கை வகிக்கின்றது என்பதையும் இது எவ்வாறான பங்கை வகிக்க முடியாது என்பதையும் கோட்பாடு மற்றும் கொள்கை அடிப்படையில் எடுத்து விளக்குகின்றது. பணம் ஒரு விடயம் அல்ல என்ற எண்ணக்கரு எவ்வாறு பணம் ஒரு விடயம் என்ற நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை வரலாற்று அடிப்படையில் எடுத்து விளக்குகின்றது. பணக் கொள்கையின் தோற்றம், அதன் பரிணாம வளர்ச்சி மற்றும் அவற்றின் தற்போதைய நிலை போன்றவற்றை கோட்பாடு மற்றும் புள்ளிவிபர ரீதியாக எடுத்து விளக்க முற்படுகின்றது. பணம், வங்கியியல், பொது விலை மட்டம், பழம் பொருளியல் கோட்பாட்டில் பணத்தின் பங்கு, கெயின்சிய பொருளியலில் பணத்தின் பங்கு, நவ பழம் பொருளியலாளர்களின் கோட்பாட்டில் நாணய மற்றும் இறைக் கொள்கையின் பங்கு, நாணயவியல்வாதம் ஆகிய ஏழு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 1001424). 

ஏனைய பதிவுகள்