10339 பாகுபாடு, பெயரீடு மற்றும் தாவரக் குடும்பங்கள்.

ஆர்.என்.டி.பொன்சேகா (ஆங்கில மூலம்), உமா குமாரசுவாமி (தமிழாக்கம்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234 K.K.S.வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1994. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம்).

(3), 104 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 110., அளவு: 21×14 சமீ.

Classification, Nomenclature and Plant Families என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம். மூல நூலாசிரியர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் தாவரவியல் திணைக்களத்தைச் சேர்ந்த பேராசிரியராவார். தமிழாக்கம் செய்த பேராசிரியை உமா குமாரசுவாமி, நாவல திறந்த பல்கலைக்கழகத்தின் தாவரவியற் பிரிவைச் சேர்ந்தவர். இந்த நூல் பாகுபாடு, தாவரக் குடும்பங்களின் பாகுபாடு, பெயரீடு, கலன்தாவரங்கள், அங்கியொசுப்பேர்மேக்களைப் பாகுபடுத்துவதில் பயன்படுத்தப்படும் இயல்புகள், தாவரக் குடும்பங்களைக் கற்கும் முறை, தாவரக் குடும்பங்கள், இலெகுமினோசே, கொம்பொசிற்றெ (அஸ்டராசே), பல்மே (அரிக்கெசே), கிரமினே (போஏசியே) ஆகிய 11 தலைப்புகளில் தாவரக்குடும்பங்கள் பற்றிய உயிரியல் விஞ்ஞானத் தகவல்களைக் கொண்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 105517).  

ஏனைய பதிவுகள்