டி.சாம். யாழ்ப்பாணம்: டானியல் மெமோரியல் பப்ளிஷர்ஸ், 233,336, ஸ்டான்லி வீதி, 4வது பதிப்பு, 2005, 1வது பதிப்பு, 1999, 2வது பதிப்பு, 2001, 3வது பதிப்பு, 2003. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டர்ஸ்).
(3), 246 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 955-98714-2-0.
இரண்டு பிரிவுகளில் எழுதப்பட்டுள்ள இந்நூலின் முதற்பிரிவில் கணக்கீடும் அதன் சூழலும், கணக்கீட்டின் அடிப்படை, இரட்டைப்பதிவு அறிமுகம், கணக்கீட்டின் உள்ளீடுகளைப் பதிவு செய்தல், நிதிக் கூற்றுக்கள், நிலையான சொத்துக்களும் பெறுமானத் தேய்வும், நிறைவில் பதிவுகள், இலாப நோக்கமற்ற அமைப்புகளின் கணக்குகள், பங்குடமைக் கணக்குகள் ஆகிய ஒன்பது பாடங்களும், இரண்டாம் பிரிவில் வரையறுத்த கம்பெனிக் கணக்குகள், கணக்கீட்டு நியமங்கள், பாய்ச்சல் கூற்றுக்கள், கணக்கீட்டு விகிதங்கள் மூலமாக நிதிக் கூற்றுகளை விமர்சனம் செய்தல் ஆகிய நான்கு பாடங்களுமாக மொத்தம் 13 பாடங்களில் இந்நூல் நவீன நிதிக் கணக்கீட்டுக் கோட்பாடுகளை விளக்குகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 166105).