அகளங்கன் (இயற்பெயர்: நா.தர்மராஜா). வவுனியா: நா.தர்மராஜா, பம்பைமடு, 1வது பதிப்பு, ஆனி 1997. (வவுனியா: சுதன் அச்சகம்).
vi, 50 பக்கம், விலை: ரூபா 40., அளவு: 20×14.5 சமீ.
மாணவர்களின் மொழி-இலக்கிய ஆற்றலை விருத்திசெய்யும் நோக்குடன் எழுதப்பட்ட கட்டுரைகளைக் கொண்ட நூல். சுதந்திரக் கவிஞன் பாரதி, ஐந்தாம் குரவர் ஆறுமுக நாவலர், மாவீரன் பண்டாரவன்னியன், திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பன்னிரு திருமுறை, நவராத்திரி, சிவராத்திரி, உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம், பெரியபுராணத்தில் மனுநீதிச் சோழன், தமிழ் இலக்கியத்தில் அறம், நால்வகை நிலங்கள் ஆகிய 13 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
14A19 செந்தமிழும் நாப்பழக்கம்: சிறுவர் இலக்கியம்.
அகளங்கன் (இயற்பெயர்: நா.தர்மராஜா). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 2வது பதிப்பு, 2015, 1வது பதிப்பு, 1997. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
94 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-1997-67-0.
ஐந்தாம் ஆண்டு முதல் 11ஆம் ஆண்டு வரை கல்வி கற்கும் மாணவர்கள் மேடைகளில் பேசக்கூடிய 18 பேச்சுக்களை உள்ளடக்கிய நூல் இது. மாணவர்களின் மொழி-இலக்கிய ஆற்றலை விருத்திசெய்யும் நோக்குடன் எழுதப்பட்ட கட்டுரைகளைக் கொண்ட இந்நூலின் முதற்பதிப்பு 1997இல் வெளிவந்தபோது அதில் சுதந்திரக் கவிஞன் பாரதி, ஐந்தாம் குரவர் ஆறுமுக நாவலர், மாவீரன் பண்டாரவன்னியன், திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பன்னிரு திருமுறை, நவராத்திரி, சிவராத்திரி, உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம், பெரியபுராணத்தில் மனுநீதிச் சோழன், தமிழ் இலக்கியத்தில் அறம், நால்வகை நிலங்கள் ஆகிய 13 கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. இவ்விரண்டாவது பதிப்பில் மேலதிகமாக ஐந்து படைப்பாக்கங்கள் அருந்தமிழ் மூதாட்டி ஒளவைப் பாட்டி, சுவாமி விவேகானந்தரின் சிக்காக்கோ சொற்பொழிவுகள், தங்கத்தாத்தா நவாலியூர் சோமசுந்தரப் புலவர், முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர், தமிழ்த்தூது வண.பிதா. தனிநாயகம் அடிகளார் ஆகிய தலைப்புகளில் எழுதிச் சேர்க்கப்பட்டுள்ளன. (முன்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 10462).