10464 பாரதக் கதை.

வரதர் (இயற்பெயர்: தி.ச.வரதராசன்). யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, 226, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1994. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறைச் சாலை).

164 பக்கம், விலை: ரூபா 80., அளவு: 20×14 சமீ.

பாரதக்கதை நடந்த காலம் கி.மு.3000ஆண்டுகள் என வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். துஷ்யந்தனுக்கும் சகுந்தலைக்கும் பிறந்தவன் பரதன். இவனுடைய வழிவந்தோர் பாரதர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள் வாழ்ந்த தேசம் பாரத தேசமாயிற்று. போர்க்குணம் கொண்ட பாரதர்கள் தமக்குள் நடத்திய போர்தான் பாரதப்போராக இதிகாசங்களில் பொறிக்கப்படலாயிற்று. பாரதப்போர் குறித்து வழக்கிலிருந்த நாடோடிக் கதைகளைத் தொகுத்து வியாச முனிவர் பாரதக் கதையை எழுதினார். காலம் காலமாக இக்கதையில் புதிய நிகழ்ச்சிகள் புகுத்தப்பட்டு மிகப்பெரிய நூலாக- மகா பாரதம் என்ற பெயரில் தற்போது வழங்கப்படுகின்றது. பாரதக் கதையை எழுதிய வியாச முனிவரே பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் குல குருவாகவும் இருக்கிறார். எழுத்தாளர் வரதர் சிறுவர்களை மனதில் இருத்தி வடிவமைத்துள்ள பாரதக்கதை 36 அத்தியாயங்கள் கொண்டது. வசிட்டரின் சாபத்தில் தொடங்கி சந்தனுவும் கங்கையும், பீஷ்மர், அம்பை, குருகுல விருத்தி, கர்ணன், பாண்டவர், துரோணர், அங்கநாட்டரசன், அரக்கு மாளிகை, இடும்பி, பகாசுரன், திரௌபதி சுயம்வரம், இந்திரப் பிரஸ்தம், இராசசூயம், சூழ்ச்சி, சூதாட்டம் தொடங்கிற்று, பாஞ்சாலி சபதம், பாசுபதம், துரியோதனன் அடைந்த அவமானம், நச்சு நீர்க்குளம், கீசகன் மறைவு, போருக்குப் புறப்பட்ட இளவரசன், அரச்சுனன் வெளிப்படல், தேவகுமாரன், முதல் தூதன், ஊசி முனையளவு நிலமும் இல்லை, கண்ணன் தூது, கர்ணனின் கண்ணியம், போர் வந்துவிட்டது, பீஷ்மர் வீழ்ந்தார், பகதத்தனின் யானை, அபிமன்யு மரணம், ஒரு கொடிய நிகழ்ச்சி, தருமனும் பொய் சொன்னான், வஞ்சனைகளினால் வென்ற போர் ஆகிய 36 தலைப்புகளில் இக்கதை எளிமையாகச் சொல்லப்பட்டுள்ளது.-(இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 105532).  

ஏனைய பதிவுகள்

Casino Tillägg 2024

Content 108 Heroes spelautomat | Sund Utan Omsättningskrav Tillsammans Lucky Casino Baksida av underben Utmärker Gratis Casino Deg? Så Använder Du Gratissnurr Kungen Inter Experimentera